காதல் திருமணம் யாருக்கு நீடித்து நிற்கும்?

காதல் திருமணம் என்பது எப்போது சர்வ சாதரனமாகிவிட்டது. சில இடங்களில் காதல் திருமணங்களே பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயகபட்ட திருமணம் போல் நடக்கின்றது.

சரி. இது போன்று நடக்கும் காதல் திருமண தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பம் நடத்துகின்றனரா? கடைசிவரை சந்தோசமாக வாழ்க்கை நடத்துகின்றனரா? இந்த கேள்விக்கு நடைமுறையில் பார்க்கும் கேள்விப்படும் விசயங்களை பார்க்கும்போது பெரும்பாலான  காதல் திருமணங்கள் தோல்வியில் தான் முடிகின்றன. நீண்ட காலம் திருமண பந்தம் நிலைப்பதில்லை. கல்யாணம் ஆன சில மாதங்கள் அல்லது சில நாட்களிலேயே கோர்ட் வாசலை மிதிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  ஆம் விவாகரத்து கேட்டு  நீதி மன்றத்தை நாட ஆரம்பித்து விடுகின்றனர்.

இது போன்று காதல் திருமணங்கள் சீக்கிரம் முறிவடைவதற்கு காரணம் என்ன?

கிரக கோளாறுகள் தான் காரணம். நான் பல கட்டுரைகளில் கிரகங்கள் தான் மனிதனை ஆட்டுவிக்கின்றன. அவர்களுடைய நல்லதும் கெட்டதும் கிரகங்களின் கையில்தான். ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்த போது.இருந்த கிரக நிலைபாடினால்தான்.

சில மனிதர்கள் சில கிரகங்களின் வலுவான சக்தியுடன் இருப்பார்கள். சிலருக்கு சூரிய கிரகத்துடைய வலுவுடன் இருப்பார்கள். சிலர் சந்திர கிரகத்துடைய வலுவுடன் இருப்பார்கள். இது போன்று அமைப்புள்ள ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது அவர்கள் காதல் வெற்றி பெற்று திருமணம் ஆகி அந்த திருமணமும் நீடித்து நிற்கும். காரணம் சூரியனும் சந்திரனும் தோழமை கிரகங்கள்.

அதே போன்று ஒரு ஆண் சூரிய கிரக ஆதிக்கத்தில் இருந்து அந்த பெண் சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருந்தால் அவர்கள் காதல் வெற்றி பெறாது. திருமணம் ஆனாலும் அந்த திருமணம் நீடித்து நிற்காது. கண்டிப்பாக விவாகரத்துதான் ஆகும்.

எண்கணிதம் பிரகாரம் பிறந்த தேதி என்பது கிரகங்களுக்கு சம்பந்தப்பட்டது. உதாரனத்திற்க்கு 1 ஆம் எண் சூரியனுக்கு சம்பந்தப்பட்டது. அதுபோன்று ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கிரகம் சம்பந்தப்பட்டது.

எனவே  பிறந்த தேதி மற்றும் பிறந்த போது இருந்த கிரக நிலைகளை வைத்தும் ஒரு காதல் வெற்றியடையுமா, நீடித்து நிற்குமா, திருமணம் வரை செல்லுமா, திருமணதிற்கு பின்பும் நீடித்து நிற்குமா என்பதை அறிந்து கொள்ளலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)