எல்லோரும் தொழில் செய்வதர்க்கு உரிமை உண்டு.
செய்யும் தொழிலில் லாபங்கள் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்க்கையினை மேம்படுத்தி
கொண்டு குடும்பத்தாருடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும்
விரும்புவர். அதனால்தான் தொழில் செய்கின்றனர்.
மாத சம்பளக்காரர்களுக்கு மாதம் ஒருநாள்தான் பணம்
வரும். ஆனால் தொழில் செய்பவர்களுக்கு எல்லா நாளுமே பணம் வரும் தினம்தான்.
தொழில் செய்யும் அனைவரும் அதுபோன்று செய்யும்
தொழிலில் நல்ல லாபங்கள் பெற்று சந்தோசமாக இருக்கிறார்களா என்று கேட்டால் சந்தேகமே?
ஒருவர் தான் செய்யும் தொழிலில் லாபம்
கிடைக்காமல் நஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்றால் அவர் செய்யும் தொழில்
அவருக்கு கை கொடுக்க வில்லை என்றுதான் அர்த்தம்
ஆனால் ஒரு சிலர் மட்டும் அவர்கள் செய்யும்
தொழிலில் சிறந்து விளங்குவதின் காரணம் என்ன?
மனிதர்களின் வாழ்க்கையின் அணைத்து அம்சங்களும்
அவன் தாயின் வயிற்றிலிருந்து இந்த பூமிக்கு முதன் முதலில் எட்டி பார்க்கும்போதே
அவனுடைய பிற்கால வாழ்க்கை அதாவது கல்வி, குடும்பம், திருமணம், தொழில், வேலை,
மற்றவர்களிடத்தில் உறவு போன்றவை அனைத்தும் அவன் பிறக்கும் போது நிலை கொண்டிருந்த
கிரகங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய பட்டு விடுகின்றது.
அந்த விதத்தில் ஒரு மனிதனுடைய அடையாளமே அவனுடைய
பிறந்த தேதிதான். இதை தவிர அவன் பிறந்த மாதம் வருடமும் பிறந்த நேரமும் பிறந்த
ஊரும் அவனை அடையாளம் காட்டுகின்றன.
இந்த பிறந்த தேதிக்கும், பிறந்த மாதம், பிறந்த
வருடம், பிறந்த நேரம், பிறந்த ஊர் போன்றவை, அவன் பிறந்த போது வானில் நிலை
கொண்டிருந்த கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஒருவருடைய வாழ்க்கையின் அணைத்து
அம்சங்களையும் அதாவது குணம், குடும்பம், குழந்தை, சொத்து, வேலை, தொழில், திருமணம்,
மனைவி போன்ற இன்னும் பல அம்சங்களை நிர்ணயிக்கின்றது. இதே கிரகங்கள்தான் ஒருவர் என்ன தொழில் செய்தால் அவர் வெற்றியடைய
முடியும் என்பதையும் நிர்ணயிக்கின்றது.
கிரகங்கள் என்பது பொதுவாக சூரியன், சந்திரன்,
செவ்வாய், புதன், வியாழன், சனி, இராகு மற்றும் கேது போன்ற கிரகங்களாகும்.
அதுபோன்று 1 ஆம் தேதி பிறந்த தேதி ஒருவருக்கு பொருத்தமான
தொழில் அல்லது லாபத்தை தரக்கூடிய தொழில் எதுவென்று தெரிந்து கொள்ள அவருடைய பிறந்த
தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம், பிறந்த ஊர் போன்றவை நிர்ணயம் செய்கின்றன.
1 ஆம் தேதி பிறந்த ஒருவர் எந்த கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டு
இருக்கிறார் என்பதை அவர் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த வருடம், பிறந்த நேரம்,
பிறந்த ஊர் போன்றவற்றை வைத்து அறிந்து அதன் பிரகாரம் தொழில் செய்யும்போது அவர்
அந்த தொழிலில் வெற்றி அடைந்து லாபங்கள் சம்பாதிக்கிறார்.
உதாரனத்திற்க்கு 1 ஆம்
தேதி பிறந்த ஒருவர் சூரிய கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்கிறார் என்றால் சூரிய
கிரகம் சம்பந்தப்பட்ட மருத்துவம், அரசு சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்து மேன்மை
பெறலாம். இதுபோன்று சூரிய கிரகம் சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறைய உள்ளன.
ஆனால்
சரியாக ஆராய்ந்து உரிய கிரகத்தின் வலுவினை தெரிந்துகொண்டு அந்த தொழிலை
செய்யவேண்டும் இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையாகிவிடும்.
மனிதனுடைய சிந்தனை செயல் வெற்றி அனைத்திற்கும்
காரணமே கிரக அலைகள் தான். இந்த கிரக அலைகள் அவர் அவர் பிறந்த தேதி, மாதம், வருடம்,
நேரம், ஊர் இவைகளுக்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு வெற்றியை தருகின்றன.
அந்த விதத்தில் 1 ஆம் தேதி பிறந்த ஒருவர் தன்னுடைய பிறந்த தேதி,
மாதம், வருடம், நேரம் ஊர் இவைகளின் எந்த கிரகம் சாதகமாக இருக்கிறது என்று அறிந்து அதன்
அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் அதில் வெற்றி பெறலாம்.