உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை எப்படி தேர்வு செய்வது?

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
காரணம் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இணைந்து வாழ்க்கை என்னும் கப்பலை சுகமாகவும் சந்தோசமாகவும் நகர்த்தமுடியும். வாழ்க்கை என்னும் கடலில் அவ்வப்போது வீசும் கடல் சீற்றத்தை சமாளிக்க முடியும்.

அதற்க்கு கணவன் மனைவி இருவருக்கும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டு செல்லும் மனப்பான்மை இருக்க வேண்டும். Ego என்ற பேச்சுக்கே அங்கு இடம் இருக்க கூடாது. இந்த குணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்றால்
மன முறிவு ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்று விடும்.

அன்றாடம் செய்தி தாள்களில் தொலை காட்சி சேனல்களில் எத்தனையோ செய்திகளை நிகழ்சிகளை பார்க்கிறோம். கல்யாணம் ஆகி ஒரு சில மாதங்களில் பிரிவு போன்ற நிகழ்ச்சிகள் அண்மை காலங்களில் மிகவும் அதிகம்.

இதில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  பெண்ணுக்கு வயது 19 கணவனுக்கு வயது 20 இருவரும் காதல் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்காததால் இருவரும் தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டனர்.
செய்தியை கேள்விப்பட்டு பெண்ணின் தந்தை தூக்கு மாட்டி தற்கொலை செய்து விடுகிறார்.

சில மாதங்கள் கழித்து அந்த பெண் தன்னுடைய தாயாரிடம் நான் தப்பு செய்து விட்டேன் என்னுடைய கணவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை அதனால் என்னை கூட்டி செல்லுங்கள் என்று கூறுகிறாள். தாயும் தன்னுடைய கணவன் சாவுக்கு காரணமாக இருந்த மகள் என்றும் பாராமல் நீதி மன்றம் மூலம் அணுகி தன்னுடைய மகளை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். காதல் கணவனுக்கு மனைவியை பிரிய மனதில்லை. நீதிபதி இருவரையும் தனி தனியே விசாரிக்கிறார். விசாரித்த பின்பு யாருடன் செல்ல வேண்டும் என்ற முடிவினை அந்த பெண் தீர்மானித்து கொள்ளட்டும் என்று அவள் முடிவுக்கு விட்டு விடுகிறார். அந்த பெண் முடிவாக என்னுடைய தாய் எங்களுடைய திருமணத்தை ஏற்று கொண்டால் என் கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன் என்று கூறிவிட்டு தன் தாயாருடன் சென்று விட்டால்.

இந்த முடிவினை அந்த பெண் திருமணம் செய்வதற்கு முன்பே எடுத்து இருந்தால் மார் மேலும் தோள் மேலும் வளர்த்த தந்தையை அந்த பெண் இழந்திருக்க மாட்டாள்.

இதில் இழப்பு என்ன வென்றால் திருமணம் செய்த அந்த ஆணுக்கும் விலை மதிப்பில்லாத உயிரை மாய்த்த அந்த தந்தைக்கும் அந்த குடும்பத்துக்கும்.

இது போன்று வெளியில் தெரியாத நிகழ்வுகள் எத்தனையோ.

இதையெல்லாம் தடுக்க வழி இருக்கின்றதா? ஏன் இல்லை? நம்முடைய பெரியவர்கள் எல்லாம் கால காலமாக கடை பிடித்து வரும் திருமண முறைகள் தான். அவற்றில் ஒன்று திருமண பொருத்தம்.

இந்த திருமண பொருத்தம் என்னும் ஒரு கலையின் மூலம் இன்னாருக்கு இன்னார் பொருத்தம் என்று முடிவு செய்து அந்த குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அது போன்ற திருமணங்கள்
நீண்ட நெடும் காலமாக நீடித்து நின்று 60 ஆம் கல்யாணம் 80 ஆம் கல்யாணம் வரை சென்றுள்ளது. இதற்க்கு சான்றாக பார்க்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மாயவரம் அருகில் உள்ள திருக்கடையூர் சென்று பார்க்கலாம்.
அங்குதான் 60 ஆம் கல்யாணம் 80 ஆம் கல்யாணம் நடப்பதை அடிக்கடி பார்க்கலாம்.
           
எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரக நிலைகள், சேர்க்கை, இருப்பிடம் இவற்றை வைத்து ஒரு ஆணுக்கு ஒரு குறிப்பிட்ட பெண் அல்லது ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட ஆண் பொருத்தமானவரா என்று அறிந்து அதன் பிரகாரம் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணங்கள் பல ஆண்டு காலம் நீடித்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
   
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)