படிப்பு என்பது இந்த காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எத்தனையோ படிப்புகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கபடுகின்றன. இன்ஜினியரிங், மெடிக்கல் போன்று எத்தனையோ படிப்புகள்.
படிப்பு என்பது சம்பாதிக்க வேண்டிய வயதில் உதவும் விதத்தில் இருக்கவேண்டும்.
படிப்பவர்களில் பெரும்பாலும் நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது நல்லதொரு தொழில் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படிப்பார்கள் படித்து கொண்டு இருக்கிறார்கள். .
சரி. ஒவ்வொருவரும் அவர்கள் படிக்கும் படிப்பில் சிறந்த விளங்க முடியுமா?
நிச்சயம் முடியாது. அப்படி எல்லோரும் சிறந்து விளங்க முடியும் என்றால் படிக்கும் எல்லோருமே அவர்கள் படிக்கும் படிப்பில் தேர்ச்சி பெறலாமே? பின் ஏன் சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைகின்றனர்.
காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்தில் ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வம் என்பது படிப்பு விசயத்திலும் இருக்கும்.
ஒருவர் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பார். மற்றொருவர் இன்ஜினியரிங் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பார். இவர்கள் இருவரையும் அவர்கள் விரும்பிய படிப்பில் படிக்க வைத்தால் அவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவர். பிற்காலத்தில் அந்த படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் ஒரு மேதையாக வருவர். அதைவிடுத்து மெடிக்கல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்புவரை இன்ஜினியரிங் படிக்கவைத்தால் அல்லது இன்ஜினியரிங் படிப்பு படிக்க விரும்புவரை மெடிக்கல் படிப்பு படிக்கவைத்தால் விளைவு
எதிர்மறையாகத்தான் இருக்கும்.
தொலை காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியை வைத்தே ஒவ்வொருவருடைய ஆர்வத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் உள்ள ஒருவருக்கு சீரியல் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றொருவருக்கு கிரிக்கெட் மேட்ச் தான் பிடிக்கும். சீரியல் பிடிக்காது. இன்னொருவருக்கு நியூஸ் சேனல் மட்டும்தான் பிடிக்கும்.
இதை போன்றுதான் படிப்பும். படிப்பவர்களை தவிர வேறு யாரும்
இதை படி அதை படி வற்புறுததகூடாது. படிப்பவர்களின் நோக்கத்திலேயே விட்டுவிடவேண்டும்.
சரி. ஒருவருக்கு எந்த படிப்பு வெற்றியையும் பிற்காலத்தில் வேலை வாய்ப்புக்கு கிடைக்கும் என்பதை எப்படி அறியலாம் அல்லது அத்தகைய படிப்பை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஒரு விசயத்தில் ஒருவருடைய ஆர்வம் என்பது அவர் உடல் மனம் சார்ந்த
விஷயம். இது எப்படி சாத்தியம் என்றால் அவர் பிறக்கும்போது அமைந்த கிரக நிலைகளை வைத்து மற்றும் அவர் பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம் இவற்றை வைத்து சரியான படிப்பை தேர்ந்தெடுக்க செய்யலாம்.
அப்படி அவருக்கு ஆர்வம் உள்ள படிப்பை அவருக்கு தேர்ந்தெடுத்து தரும்போது அதில் அளவுக்கு மீறிய ஆர்வம் ஏற்பட்டு, சிறந்து விளங்கி, வேலை வாய்ப்புக்கு செல்லும்போது மிக சுலபமாக தேர்வு செய்யப்பட்டு சிறந்து விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. தொழில் சார்ந்த படிப்பாக இருந்தால் மற்ற தொழில் முனைவோரிடம் இருந்து வித்தியாசமாக இருந்து போட்டிகளை எளிதில் சமாளித்து வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.